தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
நடைபெற்று முடிந்த முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் இன்று நடக்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான நாணய சுழட்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இதற்கமைய 27 ஓவர்களில் 191 ஓட்டங்களை எடுத்துள்ள இங்கிலாந்து 2 விக்கட்டுக்களை எடுத்துள்ளது.