டொராண்டோ காவல்துறையினர் சனிக்கிழமை இரவு பொழுதுபோக்கு பகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் இருப்பதாகக் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் வெளியான தொடர் பதிவுகளில், ஜோன் வீதி மற்றும் அடிலெய்டுவீதி மேற்கு பகுதியில் இரவு 10:34 மணியளவில் துப்பாக்கிச் சத்தத்திற்கு அதிகாரிகள் பதிலளித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காயமடைந்த ஆண் ஒருவரை கண்டுபிடித்தததோடு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் துப்பாக்கிச் சூடு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அடிலெய்டு வீதி மேற்கு மற்றும் ரிச்மண்ட் வீதி மேற்கு இடையே வடக்கு நோக்கிச் செல்லும் ஜோன் தெரு மூடப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தகவல் தெரிந்த எவரும் 416-808-2222 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.