தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் கார்பந்தயத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அத்துடன் சொந்தமாக கார் ரேசிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் திருப்பூர் கொங்குநாடு ரைபிள் கிளப்பில் அதன் நிறுவனர் செந்தில்குமார் உடன் இணைந்து அஜித்குமார் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

