திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிகளை பல்வேறு தனியார் செயலிகள் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் அவ்வாறு புக்கிங் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வழங்க வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாத பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இணையத்தில் டிக்கெட் புக்கிங் கட்டணம் வசூலிக்கும் புக் மை ஷோ ஜொமேட்டோ டிஸ்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் அந்தந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் டிக்கெட் புக்கிங் செய்யும் நிறுவனம் என மூவருக்கும் சரி சமமாக பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

