பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். எம்.பி. சில முக்கிய காதாபாத்திரங்களில் நடிப்பையும் தொடரும் இவர் டேட்டிங் செயலி மற்றும் லிவ் இன் உறவுகள் இந்தியக் கலாசாரத்தை அரிக்கக்கூடியது என குறிப்பிட்டுள்ளார்.
டேட்டிங் செயலிகள் அப்படித்தான் இருக்கிறது. மேலும் இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்தும் நபர்களுடன் தொடர்புகொள்வதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. டேட்டிங் செயலியைப் பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்கள். நீங்கள் அங்குத் தோல்வியுற்றவர்களை மட்டுமே காண்பீர்கள். லிவ்-இன் உறவுகள் பெண்களுக்குக் தீங்கு விளைவிக்கும்.
திருமணம் போன்ற சில குடும்ப அமைப்புகள் மாறாமல் இருக்க வேண்டும். நமது சமூகத்தில் திருமணங்கள் மிகவும் முக்கியம், மேலும் ஆண் தனது மனைவிக்கு விசுவாசமாக இருக்க அளிக்கும் வாக்குறுதியாகும்.
இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் போன்ற புதிய யோசனைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். என் வாழ்நாள் முழுவதும், இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடும் மற்றவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவை பெண்களுக்கு ஏற்ற விஷயங்கள் அல்ல என்பதை நான் உங்களுக்குக் கூற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.