பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘தக் லைஃப்’ (Thug Life).. திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘தக் லைப்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. அதில் கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் ஹைலைட்.
சமீபத்தில் நடந்த நேர்காணலில் படக்குழு கலந்துக் கொண்டனர் அதில் நடிகர் சிலம்பரசன் திருமணத்தை பற்றி அவருடைய கருத்தை கூறியுள்ளார்.
” திருமணம் இங்கு பிரச்சனை இல்லை. பிரச்சனை இங்கு யாரை நாம் திருமணம் செய்கிறோம் என்பது தான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நம்மிடம் குறைந்துக் கொண்டே வருகிறது. நீ இல்லன்னா இன்னொருத்தன், நீ இல்லன்னா இன்னொருத்தி… இது என்ன மனப்பான்மை. நீ இல்லன்னா இன்னொருத்தி வந்துகிட்டே தான் இருப்பா அதுக்காக அவங்க கூடலாம் போயிட முடியாதுல.. நமக்கான நேரம் வரும் போது நமக்கான ஒருவர் கண்டிப்பாக வருவார் அப்போது எல்லாம் நடக்கும்” என கூறியுள்ளார்.