விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தலைவன், தலைவி படத்தின் பொக்ஸ் ஓபிஸ் விவரம் வெளியாகியுள்ளது.
சத்யஜோதி நிறுவன தயாரிப்பில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு, காளி வெங்கட், மைனா நந்தினி என பலரும் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தலைவன் தலைவி படம் 8 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 58 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.