சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை நிறுத்திய நிலையில் ஓட்டுனரிடம் இருந்து பல போதைப்பொருட்களையும் தடைசெய்யப்பட்ட கத்தியையும் கைப்பற்றியதாக ஹமில்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜூலை 16 அன்றுஒட்டாவா வீதியின் வடக்கே சென்டர் மாலுக்கு அருகிலுள்ள பகுதியில் அங்கீகரிக்கப்படாத உரிமத் தகடு கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளை HEAT பிரிவின் உறுப்பினர்கள் கவனித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையியல் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும், ஃபென்டானில், கொக்கையின், மெத்தம்பேட்டமைன் மற்றும் ஓக்ஸிகோடோன் அளவுகளுடன் ஒரு சுவிட்ச்பிளேட் கத்தியையும் கண்டுபிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஒரு சிறிய அளவு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் விளைவாக, ஹமில்டனைச் சேர்ந்த 35 வயதான ஜேம்ஸ் டில்லி என்ற குறித்த நபர் கைது செய்யப்பட்டு, தடைசெய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருந்தது மற்றும் கடத்தல் நோக்கத்திற்காக நான்கு குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கைது செய்யபப்ட்ட நபர் மத்திய காவல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது பிணை மறுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
.