19.3 C
Scarborough

‘ட்ரம்பின் வரி குறைப்பை மேலும் குறைக்க வேண்டும்’

Must read

ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானது தானா என்பது குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அமெரிக்காவின் புதிய தீர்வை வரி குறித்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பை அமெரிக்கா வழங்கி வருகிறது. ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி இடம்பெறுகிறது. தீர்வை வரி 44% வீதத்திலிருந்து 30% ஆகக் குறைந்தமை நல்லதொரு விடயமாகும்.

என்றாலும், எங்களுடன் ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானது தானா என ஆராய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் 25%, மால்டோவா 25%, புரூணை 25%, தென் கொரியா மற்றும் கஸகஸ்தான் 25%, இந்தியா 26% என்ற வகையில் இந்நாடுகள் தமது தீர்வை வரிகளைக் குறைத்துக் கொண்டுள்ளன.

இந்தியா பங்களாதேஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அடுத்த 3 வாரங்களுக்குள் நாம் ஆழமான இராஜதந்திர தலையீட்டை மேற்கொண்டாக வேண்டும்.

நாம் வெள்ளை மாளிகையுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, இந்த வரிச் சலுகைகளை இன்னும் குறைந்த மட்டத்தில் பெற வேண்டும்.

நாட்டிற்கு சிறந்த இணக்கப்பாட்டை பெறுவதற்கு, கட்சி பேதமின்றி ஐக்கிய மக்கள் சக்தி தமது ஒத்துழைப்பைப் பெற்றுத் தரும். இந்த வரிகளால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகளை இல்லாமலாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை மீது 44 வீத வரியை விதிப்பதாக ஏப்ரல் 2 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதலில் அறிவித்திருந்த போதிலும், அண்மையில் இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் அந்த எண்ணிக்கையை 30 வீதமாகமாக குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article