இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் அமெரிக்க தலைவரின் தலையீட்டினால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேலின் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் பணய கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்திற்கும் இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதே நேரம் ஹமாஸ் போராளிகளிடம் உள்ள இஸ்ரேல் பணய கைதிகளை இந்த மாதம் 13-ம் திகதிக்குள் விடுவிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் காஸாவில் உள்ள படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் காசா மக்கள் அப்பகுதியில் உள்ள தமது வசிப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர்.
இதேநேரம் பணய கைதிகளின் உறவினர்கள் இந்த விடயத்தை கொண்டாட தொடங்கியுள்ளனர்.

