டொரோண்டோ நகரில் 44வது ஆண்டு பெரிய பிரைட் ஊர்வலம் (Pride Parade) இன்று பிற்பகலில் உற்சாகமாக தொடங்கியது.
பார்க் வீதி (Park Road) மற்றும் ரோஸ்டேல் வெலி வீதி (Rosedale Valley Road) சந்திக்கு அருகில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம், யோங்க் வீதி (Yonge Street) வழியாக நகரின் மையத்தைக் கடந்து, குயின் வீதி வெஸ்ட் (Queen Street West) மற்றும் பே வீதி (Bay Street) சந்தியில் நிறைவடையவுள்ளது.
இந்த ஊர்வலத்தை காண ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் வீதியோரங்களில் கூடியுள்ளனர்.
இது வட அமெரிக்காவின் மிகப்பெரிய ஊர்வலங்களில் ஒன்றாகும்.
ஊர்வலம் செல்லும் பல வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். வீதிகள் இரவு 8 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.