டொரண்டோவில் அடுத்த வாரத்தில் பல நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கமைய பகல்நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், ஈரப்பதம் 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்று முதல் இந்த எச்சரிக்கை அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும், பாதிக்கப்படக்கூடிய நபர்களைச் சரிபார்க்கவும், நாளின் வெப்பமான பகுதிகளில் குளிர்ந்த இடங்ககளில் இருக்கவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
அதிக வெப்பநிலை உள்ள சூழ்நிலைகள் வெப்ப சோர்வு அல்லது வெப்ப பக்கவாதம் போன்ற நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.