ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது.
இந்நிலையில் 4 -வது டெஸ்ட் போட்டி இன்று (23-ம் திகதி) பிற்பகல் 3.30 மணிக்கு மன்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
போட்டி தொடங்கியுள்ள நிலையில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாகி வருகிறது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் இந்தியா டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.