உலகின் பிரபல பொப்பிசை பாடகி டெய்லர் ஷிப்ட்டின் இசை நிகழ்ச்சியை பயன்படுத்திப் பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஒன்றாரியோ பெர்லிங்டன் பகுதியைச் சேர்ந்த 400 பேர் மோசடியில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சுமார் மூன்று லட்சம் டொலர்கள் வரையில் இவ்வாறு மக்களிடம் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை செய்வதாகக் கூறி இவ்வாறு பெருமளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மக்கள் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கட் கொள்வனவின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இணைய வழியிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பல மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றி வருவதாகவும், இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.