அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்ட போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னெர் -பிரான்சின் டெரன்ஸ் அட்மேன் உடன் மோதினார்.
இந்த மோதலில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட ஜானிக் சின்னெர் 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் டெரன்ஸ் அட்மேனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.