முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது பங்களாதேஷ் அணி.
20 ஓவர்களில் 133 ஓட்டங்களை மட்டுமே எடுத்த பங்களாதேஷ் பிறகு பாகிஸ்தானை 125 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றி வரலாறு படைத்தது.
ஷெரே பங்ளா ஸ்டேடியத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் 133 ஓட்டங்களை பங்களாதேஷ் எடுத்திருந்தது.
134 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து பாகிஸ்தானின் 6 திறன் வாய்ந்த வீரர்கள் விளையாடியும் இரட்டை இலக்க ஓட்டங்களை எட்ட முடியவில்லை. பிட்சில் பந்துகள் எகிறின. ஷோரிபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் தொடர்ந்து பவுன்ஸ் பிட்சில் பாகிஸ்தான் பேட்டிங்கிற்கு கடும் சவாலாக இருந்தனர்.
முதலில் 15 ஓட்ட ங்களுக்கு பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்தது, இப்படி குறைந்த ரன்களில் 5 விக்கெட்டுகளை இழப்பது பாகிஸ்தானுக்கு இதுவே முதல் முறையாகும். இறுதியில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.