பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் நேற்று முன்தினம் இந்த ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் சல்மான் அகா 38, ஹசன் நாஸ் 40. பகர் ஸமான் 20 ரன்கள் சேர்த்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4. குடகேஷ் மோட்டி 2 அகீல் ஹொசைன். ஷமர் ஜோசப், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கேப்டன் ஷாய் ஹோப் 21, குடகேஷ் மோட்டி 28, ஜேசன் ஹோல்டர் 16, ரொமாரியோ ஷெப்பர் 15 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்தத் தொடரின் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.