16.7 C
Scarborough

டிஆர்எப் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா

Must read

அமெரிக்க அரசு,டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக நேற்று அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவுப்பு வெளியாகியுளளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகவும்(எப்டிஓ), நியமிக்கப்பட்ட உலகளாவிய தீவிரவாத அமைப்பாகவும் (எஸ்டிஜிடி) அறிவிக்கிறது.

தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கேட்டும் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பைச் செயல்படுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article