டொராண்டோ டான்ஃபோர்த்தில் எரிந்து கொண்டிருந்த உணவகத்தின் கூரையிலிருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:25 மணியளவில் பேப் அவென்யூவின் கிழக்கே உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவிற்கு அழைப்பு வந்துள்ளது.
அவர்கள் வந்தபோது. வணிகப் பிரிவு முழுமையாக தீயில் மூழ்கியிருப்பதைக் கண்டதாக குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் கூரையில் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.கட்டிடத்தில் தரை தளத்தில் வணிக பகுதியும் மேலே இரண்டு குடியிருப்பு அலகுகளும் இருந்தன.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறிய டொராண்டோ தீயணைப்பு பிரிவு மற்றும் புலனாய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

