ஏனைய மொழியில் நடிக்கும் பிரபலங்கள் ரஜினியின் திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவதோடு அதனை பெருமையாக கருதி வரும் நிலையில் பொலிவூட் நடிகையும் ஜெயிலர் 2 வில் இணைந்துள்ளார்.
ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாரான ஜெயிலர் படத்தின் முதல் பாகம் 2023ம் ஆண்டு ஓகஸ்ட் 10ம் திகதி வெளியானது,
படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி உலகளவில் இப்படம் இந்திய மதிப்பில் ரூ. 600 முதல் ரூ. 650 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது முதல் பாகத்தை போல 2ம் பாகத்திலும் நிறைய நடிகர்கள் இணைகிறார்கள்.
மலையாள நடிகர் சுராஜ் வெம்முடு இணைகிறார் என தகவல்கள் வர இப்போது பிரபல பொலிவுட் நடிகை வித்யா பாலன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.