சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு.
தற்போது ஜூலை 25-ம் திகதி ‘தலைவன் தலைவி’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தலைவன் தலைவி’ படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை விரைவில் பிரம்மாண்டமாக நடத்தி, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.