7.4 C
Scarborough

ஜப்பானின் அடுத்த பிரதமர் யார்?

Must read

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத் தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதனால், கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (3)  நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவரே ஜப்பானின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார்.

இதில், நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் வாய்ப்புடன் சனே டகாயிச்சியும்   (64), போருக்குப் பிந்தைய ஜப்பானின் மிக இளம் வயது பிரதமராகும் வாய்ப்புடன் மிதவாத சீர்திருத்தவாதியான ஷின்ஜிரோ கொய்சுமியும்  (44) முன்னணியில் உள்ளனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளரான சனே டகாயிச்சி, வலுவான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை முன்னிறுத்துகிறார்.

அதே சமயம், முன்னாள் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமியின் மகனான ஷின்ஜிரோ, அரசியலில் சீர்திருத்தம், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால், புதிய பிரதமருக்கு சட்டங்களை நிறைவேற்றுவது, அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, மக்கள்தொகை நெருக்கடியைச் சமாளிப்பது என பல்வேறு பெரும் சவால்கள் காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article