எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டாலும். படத்தின் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் 121 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. மேலும் ஜன நாயகன் படத்தின் இந்தி வெர்ஷனை ஓடிடியில் 8 வாரம் திரையரங்கில் ஓடிய பிறகே ஓடிடியில் வெளியிடவுள்ளனர். திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.