19.7 C
Scarborough

‘செம்மணி எலும்புக்கூடுகள் தமிழர்களுடையது தானா’?

Must read

செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று தமிழர்கள் எண்ணுகின்றார்கள்? என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்

இதனால் எந்தப் பயனும் கிடைக்காது. முதலில் அந்த மனித எலும்புக்கூடுகள் தமிழர்களுடையது தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இன்னமும் பரிசோதனை நடத்தாமல் அந்த மனித எலும்புக்கூடுகளை வைத்துத் தமிழ்த் தரப்பினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் என தமிழ் மின்னிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

” நான் ஏற்கனவே தெரிவித்தது போல போர் நடந்த மண்ணில் மனித எலும்புக்கூடுகள் வெளிக்கிளம்பும் என்பது உண்மை.
அதேவேளை, போர் நடந்த வடக்கு மண்ணில் தமிழர்கள் மாத்திரம் உயிரிழக்கவில்லை. அங்கு இராணுவத்தினரும் இறந்தார்கள், சிங்கள, முஸ்லிம் மக்களும் இறந்தார்கள்.

போரில் இறந்த தமது உறவுகளின் எலும்புக்கூடுகளை வைத்து அரசியல் நடத்தும் தேவை சிங்கள – பௌத்தர்களுக்குக் கிடையாது. ஆனால், யார் என்றே உறுதிப்படுத்தாத எலும்புக்கூடுகளை வைத்துத் தமிழர்கள் கேவலமான முறையில் அரசியல் நடத்துகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்ச்சியாக இனவாத கருத்துக்களை தெரிவித்து வருவதோடு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கரிசனையற்ற வகையில் பேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article