செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக் கூட்டு தொகுதிகளும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுத்து வரப்படுகின்ற நிலையில் இந்த எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பபட்டுள்ளன.
அதேநேரம், நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட 3 மனித எலும்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மொத்தமாக 22 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 2 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டமாக இடம்பெறும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேநேரம் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுத்து, பின்னர் சில நாட்கள் இடைவேளையின் பின்னர் மீண்டும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.