சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டோன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். அண்மையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதன் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் ராணா, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அவர் இதில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், படக்குழு இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.