17.8 C
Scarborough

சாரதி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு

Must read

இந்த மாத தொடக்கத்தில் டொராண்டோவின் மையப்பகுதியில் வீட்டிற்கு செல்லும் வழியில் பயணி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரைட்ஷேர் சாரதி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரும் அவர்களது நண்பரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு ஒரு ரைட்ஷேர் தளம் மூலம் சந்தேக நபரை அழைத்ததாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

நண்பரை இறக்கிவிட்ட பிறகு, பாதிக்கப்பட்டவரை இலவசமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல சந்தேக நபர் முன்வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிற்கு செல்லும் வழியில் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பிரம்ப்டனைச் சேர்ந்த 28 வயதான நிஷு பன்சால் என்ற சந்தேக நபரை ஓகஸ்ட் 23 ஆம் திகதி கைது செய்ததோடு அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து தகவல் வழங்க விரும்புபவர்கள் ,புலனாய்வாளர்களை 416-808-5300 என்ற எண்ணில் அல்லது க்ரைம் ஸ்டாப்பர்ஸ் என்ற 416-222-TIPS (8477) என்ற எண்ணில் அநாமதேயமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article