2026 FIA Formula 3ஆவது சீசனுக்கு தகுதி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை யுவன் டேவிட் பெற்றுள்ளார்.
18 வயதுடைய யுவன் டேவிட் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டிக்காக AIX அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
யூரோஃபார்முலா போட்டியில் 2024 ஆம் ஆண்டின் இறுதிச் சுற்றில் அவர் ஒரு அற்புதமான அறிமுகத்தை நிகழ்த்தினார், இரண்டு வெற்றிகளையும் மூன்றாம் இடத்தையும் பெற்றார்.
FIA ஃபார்முலா 3 இல் போட்டியிடும் இலங்கையின் முதல் வீரர் என்பதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் இந்த வாய்ப்புக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.