‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இதன் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் எரின் ரூட்லிப் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை, டெய்லர் டவுன்சென்ட் கட்டெரினா சினியாகோவா ஜோடியுடன் மோதியது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எரின் ரூட்லிப் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி ஜோடி 6-4 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றது.