14.5 C
Scarborough

சம்பியன்ஸ் லீக் கால்பந்துப் தொடர் – காலிறுதிக்கு ரியல் மாட்ரிட் தகுதி

Must read

அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றிய ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட்டில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி, ரியல் மாட்ரிட் அணி UEFA சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியது.

பெனால்டி ஷூட் அவுட்டில் ரியல் மாட்ரிட் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அட்லெடிகோ அணி ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி அளித்து கோல் அடித்தது. கோனர் கல்லாகர் அணிக்கு தொடக்கத்திலேயே முன்னிலை வழங்கினார்.

பின்னர் இரு அணிகளும் வலுவான டிஃபென்ஸுகளால் எந்த கோல்களும் அடிக்கவில்லை.

முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் 1-0 என வென்றதால் இந்தப் போட்டி சமனில் முடிவடைந்தது. பின்னர் கூடுதல் நேரம் ஒத்துக்கியும் முடிவு எட்டப்படாததால் ஆட்டம் பெனால்டிக்கு சென்றது.

எனினும், போட்டியின் 70வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. போட்டியில் முன்னேற ஒரு பொன்னான வாய்ப்பாக இருந்த போதிலும் அது தவறவிடப்படது.

பின்னர், போட்டி கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேரத்தில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.

இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில், காலிறுதி போட்டியில் ரியல் மாட்ரிட்டின் ஆர்சனல் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. முதல் லெக் ஏப்ரல் 8ஆம் திகதியும், இரண்டாவது லெக் ஏப்ரல் 15ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article