15.5 C
Scarborough

சமநிலையில் லேஸியோ – பர்மா போட்டி!

Must read

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற பர்மாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது.

லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பெட்ரோ பெற்றதோடு, பர்மா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜேக்கப் ஒன்ட்ரேஜ்கா பெற்றிருந்தார்.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 74 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது. 71 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலனும், 65 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 62 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸ் காணப்படுகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article