பங்களாதேஷ், சிம்பாப்வேக்கிடையேயான டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை சிம்பாப்வே வென்ற நிலையில், சட்டோகிராமில் திங்கட்கிழமை (28) ஆரம்பித்து புதன்கிழமை (30) முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டை பங்களாதேஷ் இனிங்ஸ் மற்றும் 106 ஓட்டங்களால் வென்ற நிலையிலேயே தொடர் சமநிலையானது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 227/10 (துடுப்பாட்டம்: ஷோன் வில்லியம்ஸ் 67, நிக் வெல்ஷ் 54 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 6/60, நயீம் ஹஸன் 2/42, தன்ஸிம் ஹஸன் சகிப் 1/49)
பங்களாதேஷ்: 444/10 (துடுப்பாட்டம்: ஷட்மன் இஸ்லாம் 120, மெஹிடி ஹஸன் மிராஸ் 104, தன்ஸிம் ஹஸன் சகிப் 41, முஷ்பிக்கூர் ரஹீம் 40, அனாமுல் ஹக் 39, மொமினுல் ஹக் 33, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 23, தஜியுல் இஸ்லாம் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: வின்சென்ட் மஸெகெஸா 5/115, வெஸ்லி மட்ஹெவெரே 1/35, பிரயன் பென்னிட் 1/49, பிளஸிங்க் முஸர்பனி 1/83, வெலிங்டன் மஸகட்ஸா 1/90)
சிம்பாப்வே: 111/10 (துடுப்பாட்டம்: பென் கர்ரன் 46, கிறேய்க் எர்வின் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 5/32, தஜியுல் இஸ்லாம் 3/42, நயீம் ஹஸன் 1/34)
போட்டியின் நாயகன்: மெஹிடி ஹஸன் மிராஸ்
தொடரின் நாயகன்: மெஹிடி ஹஸன் மிராஸ்