நாட்டின் கடலோரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களுக்கு வருடந்தோறும் அபராதம் விதிக்கும் வகையில் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர முகாமைத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுபோன்ற 2500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார் தெரிவித்தார்.
“கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில், கடலோர மண்டலத்தில் ஏராளமான சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை நாங்கள் இடித்து வருகிறோம். அவற்றில் சிலவற்றிற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகளவிலான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கையை கட்டுப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.