அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் இரு ஆட்டங்களில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
மூன்றாவது போட்டி கிட்னியில் இன்று நடைபெற்றது இந்த போட்டியில் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி இனைந்து விளையாடினார். அதிரடி காட்டிய ரோஹித் சதம் அடித்து அசத்தினார் இவர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தில் இந்திய அணி எந்த விதி சிக்கலும் இன்றி இலக்கை எட்டியது.
ரோகித் சர்மா 121 ஓட்டங்களுடனும் விராட் கோலி 4 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்த போட்டியில் அரைசதம் எடுத்ததால் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் குமார் சங்கக்காரவை (14,234) முந்திக்கொண்டு 14,240 ஓட்டங்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 18 ஆயிரத்து 426 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

