நகரத்தில் நடந்த பல ஆயுதக் கொள்ளைகளுக்குக் காரணமானவராக நம்பப்படும் 19 வயது மார்ஷல் மர்பியை ஹமில்டன் பொலிஸார் தேடி வருகின்றனர்.
அவர் தனது பிணையாளரின் வீட்டிலிருந்து தப்பிச் சென்றதாகவும் நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை நிபந்தனைகளைப் பின்பற்றவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரை காண்பவர்கள் அணுக வேண்டாம் என்றும், அவரைக் கண்டால் 911க்கு அழைக்கவும் பொலிஸார் எச்சரிக்கின்றனர்
ஒரு கொள்ளைச் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இன்னும் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மர்பி இன்னும் ஹாமில்டன் பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று பொலிஸார் கூறுகின்றனர்.