டொராண்டோவின் கடற்கரைப் பகுதியில் இந்த மாதம் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக டொராண்டோ பொலிஸார் இரண்டாவது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஜூலை 5 ஆம் திகதி இரவு 10 மணிக்குப் பிறகு காக்ஸ்வெல் அவென்யூவின் மேற்கே கிழக்கு மற்றும் உட்வார்ட் அவென்யூ அருகே நடந்தது.
உணவகம் ஒன்றிற்குள் கத்தியால் குத்தப்பட்ட ஒரு நபர் குறித்த முறைப்பாடு கிடைத்ததை அடுத்து அங்கு மருத்துவர்கள் விரைந்துள்ளதாக பொலிஸார் முன்னதாக தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் 14 வயது அப்துல் அஜீஸ் சார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இந்த ஆண்டில் டொராண்டோவில் 19 வது கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, டொராண்டோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சரணடைந்ததாகவும், அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் இன்று 12 சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
வார தொடக்கத்தில் டொராண்டோவைச் சேர்ந்த மற்றொரு 16 வயது சிறுவன் பொலிஸில் சரணடைந்தார், மேலும் இதேபோல் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் காரணமாக, சந்தேக நபர்களின் பெயர்களை அதிகாரிகள் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.