ஹெமில்டனில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
மாலை 6:30 மணிக்குப் பிறகு ஹைகேட் டிரைவ் மற்றும் அப்பர் சென்டனியல் பார்க்வே சந்தியில் இந்த கொடூர விபத்து சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் விளைவாக, ஒரு வாகனம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதோடு மற்ற வாகனத்தில் இருந்த இருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வாகன மோதலுக்கான காரணம் தெரியாத நிலையில் விபத்து மறுசீரமைப்பு பிரிவு விசாரணையை மேற்கொண்டுள்ளது.
விபத்து பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-546-4753 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.