இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் “கேப்டன் கூல்” வாசகத்தை டிரேட்மார்க் (Trademark) ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் ஜூன் 5, 2023 அன்று இந்திய டிரேட்மார்க் ரிஜிஸ்ட்ரி மூலம் ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டது.
“கேப்டன் கூல்” என்ற பெயர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளின் போது பிரபலமானது.