கெலேடனில் சனிக்கிழமை அதிகாலை மூன்று பேருக்கு காயத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோ மாகாண காவல்துறைக்கு (OPP), நெடுஞ்சாலை 9 க்கு தெற்கே உள்ள ஃபின்னெர்டி சைட் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 5:15 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து OPP மோப்ப நாய் பிரிவு, அவசரகால மீட்புக் குழு மற்றும் மீட்புப் பிரிவு உட்பட பல விசேட பிரிவுகள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டன,” என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்து சிறிது நேரத்திற்குப் பிறகு, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று பேரை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில் அவர்கள் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒருவருக்கு கடுமையான ஆனால் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என்றும், மற்றவர் சிறிய காயங்களுக்கு ஆளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நான்கு பேர் காவலில் எடுக்கப்பட்டதாக தெரித்துள்ள பொலிஸார்,
மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் முறைப்பாடு அளிக்கவும் வலியுறுத்துகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.