ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தின் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வியூஸையும் அள்ளி வருகிறது. ரஜினியின் 171-வது படமான இதில் அமீர் கான்,சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர்.
இந்தி நடிகர் ஆமிர் கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘கூலி’ படத்தின் 3 நிமிட ட்ரெய்லரில் ஆரம்பத்தில் கதைக்கள அறிமுக காட்சிகள்,துணைக் கதாபாத்திரங்களின் காட்சிகள், ரஜினி என்ட்ரோ ‘அரங்கம் அதிர’ அனிருத்தின் பாடல் என்பன அடக்கம்.
கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சவுபின் கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த காட்சிகளில் நகர , ஆமிர் கானின் லுக் ஆர்வத்தை தூண்டுகின்றன. நாகர்ஜுனா, உபேந்திரா கதாபத்திரங்களும் கவனம் ஈர்க்கின்றன.
ஆகஸ்ட் 14-ல் ரிலீஸாகும் இப்படம் பாரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.