கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை 3 வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவத்தில் அவளது தாய் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கியூபெக் மாகாணத்தில் வாழும் மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி மாயமான நிலையில், பொலிசார் அவளை தீவிரமாகத் தேடிவந்தார்கள்.
பொலிஸாரின் தேடுதலில் காணாமல் போன அந்தக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
அதே நேரத்தில், குழந்தையை கவனிக்காமல் விட்டதற்காக அதன் தாய் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர், ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் செலவிட நேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கும் சில பிரச்சினைகள் இருப்பதாக அவரது சட்டத்தரணி கூறியுள்ள நிலையில், குழந்தையின் எதிர்காலம் கருதி, அவரது பெயரை வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.