ஜுராசிக் பார்க் Jurassic Park நிறைவடைந்த நிலையில், அதனை தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து புதிய தோற்றத்தில் Jurassic World வெளிவந்தது. இதன்பின் Jurassic World: Fallen Kingdom, Jurassic World Dominion ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. அதனுடைய அடுத்த படைப்புதான் இந்த Jurassic World Rebirth.
முதல் நாளே மாபெரும் வசூல் சாதனை படைத்த Jurassic World Rebirth.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Jurassic World Rebirth First Day Box Office
கரித் எட்வர்ட்ஸ் Gareth Edwards இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்கேர்லெட் ஜொஹன்சன் Scarlett Johansson, மஹர்ஷலா அலி Mahershala Ali மற்றும் ஜோனாதன் பெய்லி Jonathan Bailey ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றான Jurassic World-ன் இந்த Rebirth திரைப்படம் பிரம்மாண்ட செலவில் உருவாக்கப்பட்டு நேற்று திரையரங்கில் வெளியானது. விமர்சன ரீதியாக இப்படம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால், குழந்தைகள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், Jurassic World Rebirth திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளே ரூ. 1000 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.