19.6 C
Scarborough

குற்றவியல் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது!

Must read

யோர்க் பிராந்தியத்தில் செயல்படும் வெளிநாட்டினரின் குற்றவியல் வலையமைப்பின் உறுப்பினராகபொலிஸார் கருதும் ஒருவர் கைது செய்யபப்ட்டுள்ளார்.

ரிச்மண்ட் ஹில்லில் நடந்த வன்முறை மற்றும் நகை கொள்ளை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார், குறித்த நபர் கொள்ளையிட்ட சம்பவம் கமராவில் பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை, யோர்க் பிராந்திய காவல்துறை ஜூலை 15 ஆம் திகதி காலை யோங்கே வீதி மற்றும் கேன்யன் ஹில் அவென்யூ அருகே உள்ள ஒரு பிளாசா வாகன நிறுத்துமிடத்தில் நடந்த சம்பவத்தின் காட்சிகளை வெளியிட்டது.

இதில், 78 வயதுடைய ஒரு பெண் தடுமாறி தரையில் விழுவது மற்றும் அதே நேரத்தில் வெள்ளை நிற காரில் பின் இருக்கையில் பயணித்த ஒருவர் தனது கைகளை நீட்டியுள்ளமை உள்ளிட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.

வாகனம் நின்ற சமயத்தில் பின்புற பயணி ஜன்னலுக்கு வெளியே சிறிது நேரம் பார்த்த பிறகு, வாகனம் நகருவது இதற்கிடையில், மற்றொரு நபர் அந்தப் பெண்ணின் உதவிக்கு வருவதைக் காட்சிகளில் காண முடிகின்றது.

அந்தப் பெண் கொள்ளையில் பாதிக்கப்பட்டவர் என்பதை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்தப் பெண்ணின் காயங்கள் குறிப்பிடத்தக்கவை என்றும், அவர் குணமடைந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை குறித்த வாகனத்தை செலுத்திய 35 வயதான ஓராசெல் என்பவர் கைது செய்யப்பட்டு, கொள்ளை மற்றும் ஆபத்தான நடவடிக்கைக்காக குற்றம் சாட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை.

வாகனத்தில் இருந்த மற்ற இரண்டு பயணிகள் அடையாளம் காணப்படவில்லை.

குறித்த வாகனம் வாடகை வாகனம் என்றும், அதை திருப்பி அனுப்பியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஓராசெல் ஒரு குற்றவியல் வலையமைப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதால், ஏனைய பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஓராசெல் அல்லது அவரது இரண்டு நண்பர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 1-866-876-5423 நீட்டிப்பு 7244 அல்லது க்ரைம் ஸ்டாப்பர்ஸ் என்ற அநாமதேய எண்ணை 1-800-222-TIPS என்ற எண்ணில் அழைக்குமாறு பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article