குயின் ஸ்ட்ரீட் வெஸ்டில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்
டொராண்டோ காவல்துறை, சனிக்கிழமை இரவு நகர மத்தியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
வெஸ்ட் லாட்ஜ் அவென்யூ மற்றும் குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் ஒரு ஆண் கத்திக்குத்து காயத்துடன் காணப்பட்டதாக தெரிவித்து இரவு 11:22 மணியளவில் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அவர் கத்தியால் குத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார், மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

