அமெரிக்காவின் 46மாநிலங்களில் வயதானவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கனேடியரான கேரத் வெஸ்ட் ” கியூபெக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘கிரேண்ட் பேரண்ட் ஸ்கேம்’ என அழைக்கப்படும் சதி திட்டத்தை வழிநடத்தியவர் என வெஸ்ட் அறியப்படுகிறார்.
ரியல் எஸ்டேட் டெவலப்பராகக் காட்டிக் கொண்ட வெஸ்ட், பல மில்லியன் டொலர் பணத்தை மோசடி செய்ய திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார், அவசர நிதியை அனுப்புமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்க தொலைபேசி மத்திய நிலையங்களை அவர் பயன்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
தமது பேரக்குழந்தைகள் கைது செய்யப்பட்டதாக அல்லது காயமடைந்ததாக மற்றும் அவர்களுக்கு அவசரமாக பிணை பணம் தேவைப்படுகிறது என தாத்தா பாட்டிகளுக்கு அறிவித்து அதன் மூலம் இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் விரைவாகச் செயல்படவும், மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நிலைமையை ரகசியமாக வைத்திருக்கவும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் மோசடி செய்பவர்கள் அவர்களை போலி வழக்கறிஞர்கள் அல்லது பிணை முகவர்களுடன் இணைத்து, பணத்தைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர், சில நேரங்களில் போக்குவரத்து சேவைகள் அல்லது கூரியர்களைப் பயன்படுத்தியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.