உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததோடு, ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தையும் உடைத்தது தென் ஆப்பிரிக்கா அணி.
தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா டொஸ் வென்று அவுஸ்திரேலியாவை துடுப்பாட்டத்துக்கு அழைத்தது, 74 ஓட்டங்கள் பின் தங்கியிருந்தும் அவுஸ்திரேலியாவை உதைத்து வெற்றி பெறச் செய்த 2-வது இன்னிங்ஸ் பேட்டிங், அதுவும் அவர் காயமடைந்த நிலையிலும் உறுதியுடன் நின்றது வெற்றிக்கு அடித்தளமிட்டது. இவ்வாறு அவர் டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனை பலராலும் பேசப்படுகின்றது.
தெம்பா பவுமா 9 டெஸ்ட் போட்டிகளில் வென்று ஒரு போட்டியில் டிரா செய்துள்ளார். 10 மேட்ச்களில் கேப்டனாக இன்னும் தோல்வியடையாத ஒரு கேப்டன் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
இங்கிலாந்தின் பெர்சி சப்மேன் என்பவர்தான் கேப்டனாக தோல்வியடையாமல் முதல் 9 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.