பல தசாப்தங்களாக கிழக்கு Ontario வை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் அஞ்சல் பெட்டியில் கொடி ஏற்றப்பட்டிருந்தால் தங்களுக்கு அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக புரிந்து கொள்வார்கள்.
ஆனால், இனிவரும் காலங்களில் Canada Post விநியோக முகவர்கள் கொடியை உயர்த்த மாட்டார்கள் என்று கூறப்படுகிறது, ஏனென்றால் குறிகாட்டி முதலில் அதற்காகவே உருவாக்கப்பட்டதல்ல.
கிராமப்புற அஞ்சல் பெட்டிகளில் சிவப்புக் கொடி இடப்படுவதன் நோக்கம் அஞ்சல் பெட்டியிலிருந்து வெளிச்செல்லும் அஞ்சல்களை எடுக்க விநியோக முகவர்களுக்கு வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் சமிக்ஞை ஆகும் என்று Canada Post தெரிவித்துள்ளது. மாறாக, சிவப்புக் கொடி விநியோக முகவர்களால் அஞ்சல் பெட்டியில் அஞ்சல் வைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதற்கான சமிக்ஞை அல்ல. சில விநியோக முகவர்கள் அந்த நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், அது மரியாதைக்குரியது. ஆனால், இது ஒரு தேசிய விநியோக செயல்முறை இல்லை என்று Canada Post மேலும் தெரிவித்துள்ளது.
Canada Post இனால் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் விநியோக முகவர்கள் இனி அஞ்சல் பெட்டிகளில் குறிகாட்டிக் கொடியை உயர்த்த மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, Canada Post நிறுவனம் ரெியளவிலான சம்பள உயர்வு கோரி போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கும் சேவைகளை குறைக்கும் இவ்வாறான ஓர் செயற்பாடு பலரதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது