காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறையை தெரிவித்தது.
மேலும் மத்திய காசா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெய்ர் அல்-பாலாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து கோதுமை மாவு மூட்டைகளைப் பெற வந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் அரங்கேறி உள்ளது.
2023 அக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 132,632 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.