15.4 C
Scarborough

கால் இறுதியில் கச்சனோவ்: விம்பிள்டன் டென்னிஸ்

Must read

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 109-ம் நிலை வீரரான போலந்தின் கமில் மஜ்கர்சாக்குடன் மோதினார். இதில் கரேன் கச்சனோவ் 6-4, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கால் இறுதி சுற்றில் கரேன் கச்சனோவ், 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதுகிறார். டெய்லர் ஃபிரிட்ஸ் தனது 4-வது சுற்றில் 44-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார்.

இதில் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-1, 3-0 என முன்னணியில் இருந்த போது ஜோர்டான் தாம்சன் காயம் காரணமாக விலகினார். இதனால் டெய்லர் ஃபிரிட்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 50-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லிசென்கோவா 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் 51-ம் நிலை வீராங்கனையான பிரிட்டனின் சோனே கர்தலை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article