6 C
Scarborough

கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித்;நன்றி தெரிவித்த உதயநிதி

Must read

நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்தின் குழு ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் அஜித் குழுவுக்கு நன்றி தெரிவித்துளளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

நடிகரும் நண்பருமான அஜித்குமார் ,creventic 24 H Europiean endurance championship series 2025 இல் மூன்றாம் இடம்பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமை அடையச் செய்துள்ள அஜித் சாருக்கும் அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சர்வதேச போட்டியின் போது தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை கார் ரேசிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article